புனித மரியன்னை பேராலயத்தில் புது பொலிவுடன் நற்கருணை சிற்றாலயம்

08.07.2020 புதன்கிழமை மாலை 5. 30 மணியளவில் யாழ்.மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயத்தில் அழகிய தோற்றத்துடன் புனரமைக்கப்பட்டுவந்த நற்கருணைச் சிற்றாலயம் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி

27.06.2020 சனிக்கிழமை மதியம் 12.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி அவர்களின் உருவச்சிலை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணட் ஞானப்பிரகாசம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்டத்தில் நான்கு புதிய குருக்கள்

யாழ். மறைவட்டத்தை சேர்ந்த நான்கு திருத்தொண்டர்கள் இன்று 27.06.2020 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். திருத்தொண்டர்களான அலிஸ்ரன் நியூமன், ஜோன் குருஸ், நிதர்சன், எட்வின் நரேஸ் ஆகியோரே யாழ்…

கூழாமுறிப்பு பங்கில் புதிய பங்கு பணிமனை

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட பங்குப் பணிமனை இன்று (19. 06. 2020) யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வினை பங்குத்தந்தை அருட்திரு. நிக்சன் கொலின்ஸ் தலைமை தாங்கி…

90வது அகவையில் அருட்பணி. J.B. தேவராஜா அடிகளார்

90வது அகவையில் அருட்பணி. J.B. தேவராஜா அடிகளார் இறைவனுக்கு நன்றிகூறி தனது நன்றி திருப்பலியை மன்னார், யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்களோடு இணைந்து இன்று 16.06.2020 காலை 11 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.