இளையோருக்கான முழுநாள் பயிற்சிப் பட்டறை

யாழ். திருமறைக்கலாமன்றமும் அமல மரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கு மான பணியகமும் இணைந்து முன்னெடுத்த இளையோருக்கான முழுநாள் பயிற்சிப் பட்டறை 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் ‘ஒப்ரெக்’ நிறுவனத்தில் நடைபெற்றது.

மகா ஞானொடுக்கத்திற்கான ஆரம்ப நிகழ்வு

நெடுந்தீவு பங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா ஞானொடுக்கத்திற்கான ஆரம்ப நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் சர்வ மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு 19ம் திகதி கடந்த சனிக்கிழமை உருத்திரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

விவாதப் போட்டியில் வெற்றி – புனித பத்திரிசியார் கல்லூரி

யாழ்ப்பாணம் YMCA கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் மாவட்ட நிலையில் சாதனை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை YMCA மண்டபத்தில் இடம்பெற்றது.

திருப்பாடுகளின் நாடகப் பிரதி வழங்கும் வைபவம்

திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற திருப்பாடுகளின் நாடகம் இம்முறையும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்.திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.