திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம்
போர்டோவின் திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை இளவாலை திருக்குடும்ப கன்னியர் இல்லத்தில் நடைபெற்றது.
அன்னை மரியாவின் களங்கமில்லாத திரு இதயத்திற்கு அர்ப்பணித்து செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு
உலகநாடுகள் அனைத்தையும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஸ்யா நாடுகளை அன்னை மரியாவின் களங்கமில்லாத திரு இதயத்திற்கு அர்ப்பணித்து செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து மறைமாவட்டங்களிலும் இந்நிகழ்வுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 19ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெற்றது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மண்டைதீவு மகா வித்தியால பாடசாலையில் நடைபெற்றது.
மூதாளர்களை சந்திக்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டப் பங்கிலுள்ள புனித வின்சன் டி போல் சபையின் கிறிஸ்து அரசர் பந்தி உறுப்பினர்கள் கொழும்புத்துறை புனித சூசையப்பர் மூதாளர் இல்லத்திற்கு சென்று அங்கு வாழ்ந்துவரும் வயோதிபர்களுடனான சந்திப்பொன்றை 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.