தவக்கால யாத்திரை மல்வம் பங்கு
மல்வம் பங்கு இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
தலைமைத்துவக் கருத்தரங்கு
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தை சேர்ந்த இளையோர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.
தவக்காலத் தியானம் பரந்தன் பங்கு
பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தவக்காலத் தியானம் கடந்த வாரம் அங்கு நடைபெற்றது.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 26.03.2022
https://youtu.be/qa8_RPx0hbQ
புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினரின் தமிழ் விழா
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்ரம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.