மென்பந்து கிரிக்கெட் மற்றும் கிளித்தட்டு போட்டிகள் – யாழ் குருநகர்

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவினை சிறப்பிக்கும் முகமாக யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் மென்பந்து கிரிக்கெட் மற்றும் கிளித்தட்டு போட்டிகள் என்பன 17 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உயிர்ப்பு பெருவிழா சிறப்பு நிகழ்வு – முல்லைத்தீவு

முல்லைத்தீவுப் பங்கிலுள்ள கார்லோ இளையோர் ஒன்றியத்தினர் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

திருப்பாலத்துவசபை சிறார்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு – நெடுந்தீவு பங்கு

தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள நெடுந்தீவு பங்கில் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவசபை சிறார்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்று கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வு- சாவகச்சேரி புனித லிகோரியார் பங்கு

கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் விளையாட்டுக் கழகத்தின் ஓழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட் விளையாட்டு நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.

நித்திய அர்ப்பண வார்த்தைபாட்டு நிகழ்வு

செபமாலைதாசர் துறவற சபையைச் சேர்ந்த அருட் சசோதரர் அருண் சிங். அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைபாட்டு நிகழ்வு அச்சுவேலி புனித செபமாலை மாதா ஆச்சிரமத்தில் 20 ஆம் திகதி அன்று நடைபெற்றது.