அல்லைப்பிட்டி வெண்புரவி புனித அந்தோனியார் ஆலய முதல்நன்மை நிகழ்வு
அல்லைப்பிட்டி வெண்புரவி புனித அந்தோனியார் ஆலயத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் 10 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
அமரர் அருட்தந்தை அன்ரன் மத்தாயஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய முன்னாள் பங்குத்தந்தை அமரர் அருட்தந்தை அன்ரன் மத்தாயஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் ஏற்பாட்டில் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு…
கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு
கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பூநகரி பள்ளிக்குடா அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வளாக மரநடுகை நிகழ்வு
நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வளாகத்தில் சென்றல் பினான்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை நிகழ்வு 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 20 வரையான பயன்தரு மரங்கள் நாட்டிவைக்கப்பட்டன.
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 1ஆம் திகதி புனிதரின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு 4ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம்…