கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் பங்குமட்டரீதியாக நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.
மண்டைதீவு பங்கு புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்ற விழா
மண்டைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்ற விழா பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்னம் அவர்களின் வழிகாட்டலில் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து கலை நிகழ்வுகளும்பீடப்பணியாளர்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியும் இடம்பெற்றதுடன் மதிய விருந்துபசாரமும் நிகழ்வின்…
வட்டக்கச்சி பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு
வட்டக்கச்சி பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருவிவிலிய பரீட்சையை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இப்பாசறை நிகழ்வில் 98 மாணவர்கள்…
கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய முதல்நன்மை நிகழ்வு
கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 9 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
தாளையடி பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற இருக்கும் மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு
தாளையடி பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற இருக்கும் மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை குடாரப்பு தூய கார்மேல் அன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பாசறை நிகழ்வில் தாளையடி, செம்பியன்பற்று, நெல்லியான், குடாரப்பு…