வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட KSPL- Season 03 உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய YOUNG FIGHTERSஅணி முதலாம் இடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் FIGHTER KINGS அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ், கட்டைக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர், கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர், சென்மேரிஸ் நாடக மன்ற தலைவர், முள்ளியான் உப அஞ்சல் அலுவலக அதிகாரி, பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.