Category: What’s New

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ

டிச.30. மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் அவருடைய பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வும் இன்று (சனிக்கிழமை 30ஆம் திகதி) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

இயேசு பாலனின் வலுவற்ற எளிமையைத் தியானிப்போம்

டிச.23,2017. “கிறிஸ்மஸை உண்மையிலேயே நாம் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைத் தியானிப்போம். அங்கே இறைவன் இருக்கின்றார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

“கிறிஸ்மஸ் விழாவை விடுதலை செய்வோம்!” – திருத்தந்தை டுவிட்டர்

டிச.23,2017. நெருங்கிவரும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்மஸ் விழாவை பிணைக்கைதியாக வைத்திருக்கும் உலகப் போக்கிலிருந்து அதனை விடுதலை செய்வோம்! இறைவனால் அன்புகூரப்படுவதே, உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் அழகு” என்று கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலைய திறப்புவிழா

டிச.23.யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலையம் இன்று சனிகிழமை 23.12.2017 காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் மறைக்கல்வி நிலையத்தில் அமைந்துள்ளது.