200 ஆண்டு நிறைவு நாள்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு 19.09.2020 சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதியம் 12.00 மணியளவில் மடுத்திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.