Category: What’s New

மாஞ்சோலை வைத்தியசாலையில் புதிய ஆலயம்

சன.28. முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயம் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் 26.01.2018 வெள்ளிகிழமை மாலை 5.00 மணியளவில் அசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இப்புணரமைப்பு பணியை கூளமுறிப்பு…

முல்லைத்தீவு புனித. இராயப்பர் ஆலய பங்கு பணிமனை திறப்புவிழா

சன.28.முல்லைத்தீவு புனித. இராயப்பர் ஆலய பங்கு பணிமனை 26.01.2018 வெள்ளிகிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு ‘தியோகு நகர்’ நுழைவாயிலில் புனித யோசே வாஸ் சுருபம்

சன.28.முல்லைத்தீவு பங்கின் தியோகு நகர் நுழைவாயிலில் புனித யோசே வாஸ் சுருபம் 20.01.2018 சனிகிழமை மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவு பங்குதந்தை அருட்திரு அன்ரன் ஜோர்ச் அடிகளாரால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் அருட்திரு திருமகன் பணி பொறுப்பை ஏற்றுகொண்டார்

சன.25.புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார் இன்று காலை ஆயர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்து பணி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

அருட்திரு.ஜெறோ செல்வநாயகம் அடிகளார் அதிபர் பணியிலிருந்து ஒய்வு

சன.25. கடந்த பத்து வருடங்களாக புனித. பத்திரிசியார் கல்லூரியின் 23 ஆவது அதிபராக அரும்பணியாற்றிய அருட்திரு.ஜெறோ செல்வநாயகம், இன்று (25.01.2018) தனது 60 வது அகவையில் அதிபர் பணியிலிருந்து ஒய்வுபெறுகின்றார். இவர் கரம்பன் மண்ணில் பிறந்து 1985 ஆம் ஆண்டில் குருவாக…