முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
மார்ச்.6. முல்லைத்தீவு மறைகோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 4.3.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்திரு ஜெயக்குமார் தலைமையிலான இறைதியான குழுவினர் இத்தவக்கால தியானத்தை நெறிப்படுத்தினர்.