முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிந்த இடம் அல்ல, பலரின் தியாகங்களினால் விடுதலைக்கான விதை விதைக்கப்பட்ட இடம்.
19.மே ,2018. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத் திருப்பலி 18.05.2018 மாலை 5.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. பா.யோ.ஜெபரட்ணம் தலைமையில் நடைபெற்றது.