போர்கள் மனிதகுலத்தை மட்டுமன்றி எல்லாவற்றையும் அழிக்கின்றன-திருத்தந்தை பிரான்சிஸ்
போர்கள் மனிதகுலத்தை மட்டுமன்றி எல்லாவற்றையும் அழிக்கின்றன. போர்கள் வழியாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது. உரையாடலே சிறந்த வழியென வத்திக்கான புனித பேதுருவானவர் சதுக்கத்தில் 9ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொது மறைக்கல்வி உரைக்குப்பின் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும்…
வியாகுலப் பிரசங்கம் பாடல் போட்டி
இலங்கை பல்சமய கருத்தாடல் சுகவாழ்வுச் சங்கமும் புனித டொன்பொஸ்கோ சலேசியன் துறவற சபையினரும் இணைந்து நடாத்திய வியாகுலப் பிரசங்கம் பாடல் போட்டி கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சலேசியன் பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது.
தேசிய அன்பிய ஆண்டை முன்னிட்டு மரம்நாட்டும் நிகழ்வு
தேசிய அன்பிய ஆண்டை முன்னிட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரம்நாட்டும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு
அன்பிய யூபிலி ஆண்டை முன்னிட்டு யாழ், குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.