Category: What’s New

திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் காலமானார்

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் பிறந்த இவர்;…

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள்

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள்…

கரடிப்போக்கு டொன் பொஸ்கோ பாடசாலை கட்டடத்தொகுதி திறப்புவிழா

கிளிநொச்சி கரடிப்போக்கு டொன் பொஸ்கோ பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொஜுசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யூபிலி ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக…

கத்தோலிக்க திருமறை வினா-விடை நூல் வெளியீடு

மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலய ஆசிரியரான இயேசு மரியின் அன்பின் சகோதரிகள் சபை அருட்சகோதரி யோகராணி அவர்களின் கத்தோலிக்க திருமறை வினா-விடை நூல் வெளியீட்டு நிகழ்வு 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர்…