Category: What’s New

மணல்காடு பொற்பதி புனித இராயப்பர் திருச்சொருப பவனி

மணல்காடு பங்கிலுள்ள குடத்தனை பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு ஆயத்தம் செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட்ட புனிதரின் திருச்சொருப பவனி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனிதரின்…

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல மையத்தால் முன்னெடுக்கப்பட்ட திருமண ஆயத்த கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல மையத்தால் முன்னெடுக்கப்பட்ட திருமண ஆயத்த கருத்தமர்வு 22ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசா மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்றது. அகவொளி குடும்பநல மைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் முல்லைத்தீவு மறைக்கோட்டத்தைச்…

யாழ். மறைக்கோட்ட இளையோர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. மறைக்கோட்டஇளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்பெயின் நாட்டிலிருந்து வருகைதந்திருந்த அருட்தந்தை…

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 24ம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

காலி மறைமாவட்ட ஆயர் அவர்களின் தாயாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் கிங்சிலி விக்கிரமசிங்க அவர்களின் அன்புத்தாயார் மார்கிறேட் திரேசா திலகரட்ண அவர்கள் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.