Category: What’s New

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை…

பருத்தித்துறை பங்கு குடும்ப தலைவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு

பருத்தித்துறை திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு 18ஆம் சனிக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை றமேஸ்…

சாவகச்சேரி பங்கில் சிறப்பு நிகழ்வுகள்

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் வானதூதர்களின் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கபட்ட தமது சபையின் 6வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும்…

கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான அன்பிய கள அனுபவப்பயிற்சி

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அன்பிய கள அனுபவப்பயிற்சி வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஏற்பாட்டில்…

ஆசிய மறைபணி நிலையத்தின் ஏற்பாட்டில் இளையோருக்கான கருத்தமர்வு

ஆசிய மறைபணி நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நீதி மற்றும் சமாதானம்’ என்னும் கருப்பொருளில் இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஞானோதய ஆரம்ப நவசந்நியாச இல்லத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை சேர்ந்த இளையோரை இணைத்து…