Category: What’s New

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம்

உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் நுரையீரல் அழற்சி நோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக திருப்பீட சமூகத் தொடர்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் காலை…

அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம்பெற்ற அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 22ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற்றது. ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்ற இத்திருச்சடங்கில் திருத்தந்தையின்…

சுவாமி ஞானப்பிரகாசியார் அடிகளாரின் 150ஆவது பிறந்த தின சிறப்பு நிகழ்வுகள்

சுவாமி ஞானப்பிரகாசியார் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் முகமாக தனிநாயக தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மறைமாவட்ட மற்றும்…

யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கை

உரிமையாளரின் அனுமதியின்றி தையிட்டி பிரதேச தனியார் காணியொன்றில் பௌத்த விகாரை கட்டப்பட்டதை கண்டித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் இராணுவம் போர்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில்…

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையினரின் உயர் மாநாடு

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையினரின் உயர் மாநாடு மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் 16 ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை மன்னார் ‘ஞானோதயம்’ அமலமரித்தியாகிகள் இல்லத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகளின் வாழ்வையும் பல்வேறுபட்ட பணிகளையும் சிந்தித்து…