போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் பல்வேறு இடங்களிலும் தயாரிக்கப்படும் Bian உற்பத்தி பொருட்களின் விற்பனை நிகழ்வு கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.
திருக்குடும்ப மாகாண பொருளாளர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை சபைதலைவி அருட்சகோதரி அனா மரியா அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.