“கிறிஸ்மஸ் விழாவை விடுதலை செய்வோம்!” – திருத்தந்தை டுவிட்டர்
டிச.23,2017. நெருங்கிவரும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்மஸ் விழாவை பிணைக்கைதியாக வைத்திருக்கும் உலகப் போக்கிலிருந்து அதனை விடுதலை செய்வோம்! இறைவனால் அன்புகூரப்படுவதே, உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் அழகு” என்று கூறியுள்ளார்.