Author: admin

பரலோக இராக்கினி பிரடசீடியத்தினர் தமது சபை ஆரம்பித்ததன் 18ஆம் ஆண்டு நிறைவு

தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள ஊர்காவற்றுறை பங்கில் இயங்கிவரும் மரியாயின் சேனை பரலோக இராக்கினி பிரடசீடியத்தினர் தமது சபை ஆரம்பித்ததன் 18ஆம் ஆண்டு நிறைவு தினத்தை 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடினார்கள்.

ஆலயத்திரு விழாக்கள்

கிளிநொச்சி, பண்டத்திப்பு, புதுக்குடியிருப்பு பங்குகளில் அமைந்துள்ள ஆலயத்திரு விழாக்கள் அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன.

ஓன்றிப்பு வார வழிபாடுகள்

யாழ் கிறிஸ்தவ ஓன்றியமும் யாழ் மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்க ஓன்றிப்புக்கான ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தும் ஓன்றிப்பு வார வழிபாடுகள் 18ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்கிழமை வரை நடைபெறவுள்ளன.

மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சி

இலங்கையின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் இளையோருக்கு ஒன்றிணைந்த மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சியை மேற்கொள்ள வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.