Author: admin

மூதாளரை கௌரவித்து மகிழ்வுட்டும் நிகழ்வு

மல்வம் திருக்குடும்ப ஆலய பிரதேசத்தில் வாழ்ந்துவரும் 70 வயதிற்கு மேற்பட்ட மூதாளரை கௌரவித்து மகிழ்வுட்டும் நிகழ்வு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் குடும்ப விழா

மானிப்பாய் பங்கில் அமைந்துள்ள புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் அவ்வாலயத்தை சேர்ந்த அனைத்துக் குடும்பங்களையும் ஒன்றிணைத்த குடும்ப விழா 13ஆம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடப்பட்டது.

மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறை

குமிழமுனை பங்கிலுள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும், மறை ஆசிரியர்களுக்கான பாட ஆயத்தங்கள், கற்பித்தல் தொடர்பான கருத்தமர்வும் 19ஆம் திகதி சனிக்கிழமை குமிழமுனை யேம்ஸ்புரத்தில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் நடைபெற்றது.

களஅனுபவ பயணம்

முல்லைத்தீவு பங்கிலுள்ள மரியாயின் சேனையினர் பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் களஅனுபவ பயணமென்றை 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

பொதுநிலையினர் கழகக் கூட்டம்

கிளிநொச்சி மறைக் கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மறைக் கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு செபஜீவன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது.