Author: admin

பீடப்பணியாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் குருநகர் பீடப்பணியாளர்கள் மற்றும் அளம்பில் பீடப்பணியாளர்கள் ஒன்றிணைந்த தலைமைத்துவ பயிற்சி கடந்த 16,17ஆம் திகதிகளில் நடைபெற்றது.

முதல் திருப்பலி – அருட்திரு தேவபாலன் பற்றிக் ஜோண்சன்

யாழ் மறைமாவட்டத்தில் கடந்த 16ஆம் திகதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட கிளறேசியன் துறவற சபையை சேர்ந்த அருட்திரு தேவபாலன் பற்றிக் ஜோண்சன் அவர்கள் தனது முதல் திருப்பலியை 19ம் திகதி கடந்த சனிக்கிழமை பெரியவிளான் பங்கின் தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.

குடும்ப விழா -மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலயம்

மானிப்பாய் பங்கில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தில் அவ்வாலயத்தை சேர்ந்த அனைத்துக் குடும்பங்களையும் ஒன்றிணைத்த குடும்ப விழா 20ஆம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடப்பட்டது.

புதிய அலுவலகமும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமும் திறந்து வைப்பு

கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்திற்கான புதிய அலுவலகமும் அங்கு அமைக்கப்பட்டுவந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் 18ஆம் திகதி சனிக்கிமை அன்று ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.