முன்பள்ளி சிறார்களின் சந்தை
மண்டைதீவு புனித பேதுருவானவர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு புனித பேதுருவானவர் முன்பள்ளியில் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மண்டைதீவு புனித பேதுருவானவர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு புனித பேதுருவானவர் முன்பள்ளியில் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
முல்லைத்தீவு செல்வபுரம் புனித யூதாததேயு முன்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்று கல்வி செயற்பாட்டை முடித்துக்கொண்டு தரம் 1க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் அமைக்கபட்டு வந்த புனித லூர்து அன்னை கெபி 20ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
அல்லைப்பிட்டிப் பங்கில் மாலை நேர வகுப்புக்களை நடாத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிலிப்பு நேரியர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
குளமங்கால் பங்கில் முதன்நன்மை பெறவுள்ள 65 சிறார்களுக்கான பாசைறையும் ஞானறிவுச் சுற்றுலாவும் 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தலத்தில் இடம்பெற்றது.