Author: admin

கற்கடதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழா

கற்கடதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருச்செபமாலை, திருச்சிலுவைப்பாதை…

தவக்கால குணமாக்கல் வழிபாடுகள்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால குணமாக்கல் வழிபாடுகள் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் முல்லைத்தீவு சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்திலும் நடைபெற்றன. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல்…

இரத்ததான நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 30 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை…

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் வழிநடத்தலில் “சிலுவையோடு பயணிப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்யாத்திரை மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள…