Aid to the Church in Need நிறுவன ஆசிய பிராந்திய தலைவர் பார்பறா றெற்ரிக் அவர்கள் நிறுவன அனுசரணை மூலம் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிகளை மேற்பார்வை செய்யும் நோக்கில் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்டத்தின் பல இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.

அகவொளி குடும்பநல நிலையம், மறைக்கல்வி நிலையம், மறைநதி கத்தோலிக்க ஊடக மையம், புனித மடுத்தீனார் சிறிய குருமடம், புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி என்பவற்றுடன் தர்மபுரம், ஊறணி, வசாவிளான், மிருசுவில், அச்சுவேலி ஆகிய இடங்களிலுள்ள பங்குப்பணிமனைகள் மடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களையும் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

By admin