யாழ். தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மொன்போர்ட் சர்வதேச பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை தினம் கடந்த 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் அருட்சகோதரன் மரிய பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இராணுவ பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.