நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் பவள விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சமூக நாடகப்போட்டி கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய குருநகர் பங்கு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் சிறந்த நடிகருக்கான விருதை செல்வன் றொட்ரிக்கோ ஜெசோர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நாடகம் ஆசிரியர் திரு. இக்னேசியஸ் பிரபா அவர்களால் எழுதப்பட்டதுடன் செல்வன் கட்சன் பிராங் விதுசன் மற்றும் செல்வன் சீசர் குகேந்திரன் ஆகியோரால் நெறியாள்கை செய்யப்பட்டது. இவ்வாற்றுகை திரு. ஜெயசீலன் றொபட்சன் அவர்களின் இசையமைப்பில் குருநகர் பங்கு இளையோர் மற்றும் பீடப்பணியாளர்களின் நடிப்பில் உருவாகி பலரது பாராட்டை பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.