உயிர்ப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தை ரெறன்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய ஜொனி மதுரநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.