மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘கல்வாரி கண்ட காவியன்’ தவக்கால ஆற்றுகை கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குதந்தை அருட்தந்தை யோண் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி றோசி மற்றம் மறையாசிரியர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இவ்வாற்றுகையில் 60 மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இவ்வாற்றுகைக்கான பிரதியை செல்வன் பிராங் விதுசன் அவர்கள் எழுதியிருந்தார்.