யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ‘வேள்வித்திருமகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அரங்கில் நடைபெற்று வருகின்றது.
பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப் பின்னணியிலும் இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் நான்கு நாட்கள் மேடையேற்றப்படும் இத்தவக்கால ஆற்றுகையை ஆயிரக்கனக்கானோர் பக்திபூர்வமாக பார்வையிட்டு வருவதுடன்
இவ்வாற்றுகை 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் இறுதிக்காட்சியுடன் நிறைவடையவுள்ளது.
திருமறைக் கலாமன்ற ஸ்தாபகர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களால் எழுதப்பட்ட வேள்வித்திருமகன் தவக்கால ஆற்றுகை பிரதி இம்முறை திரு. தைரியநாதன் யஸ்ரின் ஜெலூட் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.