வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2002ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட இளம்தளிர் உதவும் கரங்கள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கல்வி, விளையாட்டு மற்றும் கல்வி சார் துறைகளில் ஈடுபட ஆர்வமுள்ள வறிய மாணவர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ் அமைப்பு பலரது பாராட்டினையும் பெற்றுள்ளது.