யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கபட்ட கல்லூரி தினம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை கடந்தவருடம் குருத்துவ திருநிலைப்படுத்தலின் யூபிலி ஆண்டை நினைவுகூர்ந்த அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தையர்கள் பொன்சியன் மற்றும் அன்புராசா ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து இத்தினத்தின் சிறப்பு நிகழ்வுகளான மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் ஆசிரியர்களுக்கும் மாணவத் தலைவர்களுக்கும் இடையேயான நட்புரீதியான துடுப்பாட்ட போட்டியும் இடம்பெற்றன.
அத்தடன் அன்றைய தினம் 2022/ 2023 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 25 மாணவர்கள் பதக்கமும் பணப்பரிசும் பெற்றுக்கொண்டார்கள்.