கூட்டெருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் எனும் மையக்கருவில் முன்னெடுக்கப்படும் 16வது உலக ஆயர் மன்றத்தின் 2வது அமர்விற்கு மன்னார் மறைமாவட்டத்திலிருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளுமுகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஆய்வு கருத்தமர்வு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட புனித யோசவ்வாஸ் இறையியலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு ஆய்வு கருத்தமர்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு உறுப்பினர்கள், மறைக்கோட்ட முதல்வர்கள், துறவற சபைகளின் பிரதிநிதிகள், மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளென 60வரையானவர்கள் கலந்துகொண்டனர்.