நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 07,08,09ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஹினிதும, தல்கஸ்வல ஆகிய இடங்களை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவற்றில் கலந்துகொண்டனர்.

அத்துடன் நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் மற்றும் புனித திரேசாள் ஆலய பங்கு மக்கள் இணைந்து முன்னெடுத்த வீதி சிலுவைப்பாதை கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை ஞானேந்திரன் மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்தியானம் புனித திரேசா ஆலயத்தில் ஆரம்பமாகி நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

By admin