குமுழமுனை மற்றும் முழங்காவில் பங்குகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை தயதீபன் மற்றும் நிதர்சன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை குமுழமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி இரணைமாதாநகர் ஊடாக சிப்பியாறு, பாம்பு வழிகாட்டி புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற நற்கருணை வழிபாடு மற்றும் திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இவ் யாத்திரையில் 1000ற்கும் அதிகமான மக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin