தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 23ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு இடம்பெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினார்கள்.
அத்துடன் தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானத்துடன் இணைந்த குணமாக்கல் வழிபாடு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தையின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பிலிருந்து வருகைதந்த உயிர்த்த ஆண்டவர் இறைதியான குழுவினர் கலந்து திருச்செபமாலை, திருப்பலி, குணமாக்கல் வழிபாடு, நற்கருணை வழிபாடு என்பவற்றினூடாக பங்குமக்களை வழிப்படுத்தினார்கள்.
இத்தியானத்தில் 300 வரையான இறைமக்கள் கலந்து செபித்தனர்.