பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் வீதி சிலுவைப்பாதை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை பண்டத்தரிப்பு குழந்தை இயேசு ஆலயத்தில் ஆரம்பமாகி கிராம உள்வீதிகள் ஊடாக வியாகுல அன்னை கெபியை சென்றடைந்தது.