மன்னார் பரப்புக்கடந்தான் கர்த்தர் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 21ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தைவிக்டர் சோசை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இத்திருவிழாவில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென 5000ற்கும் அதிகமானவர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

 

By admin