மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கரித்தாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த அழகியல்கலை பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
வாழ்வோதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 25 இளையோர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இளையோர் ஒன்றிய உறுப்பினர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.
இக்கற்கைநெறிக்கான அனுசரணையை ஜேர்மன் நாட்டின் அகியமொண்டோ நிறுவனம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.