யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதர்களுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு சடங்கு மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கொழும்புத்தறை புனித மசனட் சிற்றாலயத்தில் மாகாண முதல்வர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரர் மரினோ குளோத், அருட்சகோதரர் டிலுசன் பியூமால் ஆகியோர் நித்திய அர்ப்பணத்தை நிறைவேற்றினார்கள்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து செபித்தனர்.