பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை, திருப்பலி ஆகியவற்றில் பங்குபற்றினார்கள்.
இந்நிகழ்வில் 40 வரையான மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.