மல்வம் உடுவில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
பங்கின் நான்கு ஆலயங்களிலிருந்து தனித்தனியாக சிலுவைப்பாதை தியானத்தை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து சங்குவேலி குழந்தை இயேசு ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்குபற்றினார்கள்.