யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளறேசியன் சபையை சேர்ந்த அருட்தந்தை றொனால்ட் அவர்கள் கலந்து சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, குழுச்செயற்பாடுகள் ஊடாக இளையோரை வழிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் 57 வரையான இளையோர் பங்குபற்றினர்.