பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தலுடன் கூடிய சிலுவைப்பாதை தியானம் கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை பிரான்ஸ் பொண்டி பணித்தளத்தில் நடைபெற்றது.
பிரான்ஸ் ஆன்மீக பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை போல் மத்தியு மதன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பன இடம்பெற்றன.
இச்சிலுவைப்பாதை தியானத்திற்கான காட்சிப்படுத்தல்களை பிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் நெறியாள்கை செய்திருந்தனர்.