மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கிறிஸ்ரியன் வாஸ் அவர்கள் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குருக்களுள் ஒருவராகிய அருட்தந்தை தனது ஆன்மீக முதிர்ச்சியினாலும் முன்மாதிரிகையான வாழ்வினாலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்.
முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையுடன் நெருங்கி பணியாற்றிய அருட்தந்தை கிறிஸ்ரியன் வாஸ் அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரும்பணியாற்றினார்.
அனைவருடனும் இலகுவாக பழகும் இயல்புகொண்ட அருட்தந்தை அவர்கள் எல்லோராலும் அதிகம் அன்புசெய்யப்பட்டார்.
அருட்தந்தையின் பணி வாழ்விற்காக நன்றிகூறி அன்னாரின் ஆன்ம இறைவனில் இளைப்பாற்ற மன்றாடுவோம்.