யாழ். பிராந்திய துறவற சபைகள் அலகின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் 09ஆம் திகதி இன்று சனிக்கிழமை பருத்தித்துறை தும்பளையில் நடைபெற்றது.
சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் சுரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சிலுவைப்பாதை தியானம், திருச்செபமாலை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பனவற்றுடன் தியான உரையும் இடம்பெற்றன.
நற்கருணைநாதர் சபையை சேர்ந்த அருட்தந்தை பிரியந்த அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி திரேஸ் ராணி அவர்கள் தியான உரையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபைகளை சேர்ந்த குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.