இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயமும் இணைந்து முன்னெடுத்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலைகளின் அதிபர்கள் அருட்தந்தை மைக் மயூரன் மற்றும் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் புனித ஹென்றியரசர் கல்லூரியின் கனடா நாட்டு பழைய மாணவர் சங்க இணைப்பாளர் திரு. பிறின்ஸ் சௌத்ரி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு பதில் வைத்திய ஆலோசகர் வைத்திய கலாநிதி சிவேந்திரன் மற்றும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய பழைய மாணவி திருமதி. புனிதம் மரியதாஸ் ஆகியோர் கௌரவவிருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.