யாழ். மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை, சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 80 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றினர்.
அத்துடன் தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் அன்றைய தினம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தீவுக மறைக்கோட்ட மறையாசரியர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தை கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் அவர்கள் தியான உரை, திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம் என்பவற்றினூடாக நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 60 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றினர்.