தவக்கால சிறப்பு நிகழ்வாக பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாசையூர் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இத்தியானத்தில் பங்குமக்கள் அயல் ஆலய மக்களென ஏராளமானவர் கலந்து செபித்தனர்.